சிறிய நன்கொடையை (ரீட்டைல் கிவ்விங்) ஒரு ஃபண்டிங் சேனலாகக் கண்டறிதல்
தனிப்பட்ட டோனர்களை உள்ளடக்கிய பெரிய குழுக்களிடம் இருந்து, அதாவது கடைகள், ஆன்லைன் தளங்கள், நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வழிகள் மூலம் சிறிய அளவிலான பணத்தைத் திரட்டும் நடைமுறையே ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங் என்பதாகும். வரம்பை விரிவுபடுத்துவதற்கும், நிதி ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதற்கும், சமூகங்களுடன் ஈடுபடுவதற்கும், பிராண்டை உருவாக்குவதற்கும், நன்கொடைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும் ஒரு மதிப்புமிக்க உத்தியே ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங் ஆகும்.
இந்த அடிப்படை வழிகாட்டுதல் உங்கள் ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங் பயணத்தைத் தொடங்க உங்களுக்கு உதவும்:
- ரீட்டைல் ஃபண்ட்ரெய்சிங்குக்கான உங்கள் தயார்நிலையை மதிப்பிடுதல்
- நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதற்கான இலக்குகள் மற்றும் நோக்கங்களை வரையறுத்தல்
- சமூக ஊடக நடவடிக்கை முயற்சிகள் மூலம் நன்கொடையாளர்களை எவ்வாறு சென்றடைவது என்பதைத் திட்டமிடுதல்
இந்த ஆதாரவளம் தலைமை, ஃபண்ட்ரெய்சிங் குழுக்கள், நான்-பிராஃபிட்நிறுவனங்களில் தொடர்பு குழுக்களுக்கு அவசியம் தேவையானது ஆகும்.
குறிப்பு: இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றின் கீழும் வழங்கப்படும் முக்கிய கேள்விகள் மற்றும் சரிபார்ப்புப் பட்டியல்களை நிறுவனங்கள் தங்கள் ரீட்டைல் ஃப்ண்ட்ரெய்சிங்கை உருவாக்க, வலுப்படுத்த அல்லது சரிபார்க்கப் பயன்படுத்தலாம்.