சமூக ஊடக ஈடுபாட்டுக்கான சிறந்த நடைமுறைகள்
பெரிய அளவிலும் குறைந்த செலவிலும் பார்வையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள் உதவியாக ஒரு தளத்தை சமூக ஊடகம் வழங்குகிறது. இது நிறுவனங்கள் தங்கள் பிராண்ட் அடையாளத்தை வெளிப்படுத்தவும், கவர்ச்சிகரமான உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவும், பின்தொடர்பவர்களுடன் நிகழ்நேரத்தில் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. உங்களது பார்வையாளர்களுடன் இணைவதற்கும், உங்கள் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கும், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக இன்று இது மாறியுள்ளது.
பார்வையாளர்களைப் புரிந்துகொள்வது, கவர்ச்சிகரமான கதைகளைச் எடுத்துக் கூறுவது, காட்சிகளைத் திறம்படப் பயன்படுத்துவது மற்றும் உண்மையானதும் வெளிப்படையானதுமான கம்யூனிகேஷனை வளர்ப்பது ஆகியவை நான்- பிராஃபிட் சமூக ஊடகத்தில் பங்குபெறுவதற்கு உதவும் சில சிறந்த நடைமுறைகளில் அடங்கும். தொடர்புகளை ஊக்குவிப்பதன் மூலமும், ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலமும், தொடர் போஸ்டிங் மூலமும் செயல்திறனை அளவிடுவதன் மூலமும் என்ஜிஓ நிறுவனங்கள் தங்கள் பார்வையாளர்களுடன் திறம்பட தொடர்பு கொண்டு, நம்பிக்கையை வளர்த்து தங்கள் பணியின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லலாம்.
தங்கள் சமூக ஊடக இருப்பை திறம்பட அதிகரிக்கத் தேவையான அறிவையும் திறன்களையும் அளித்து நான்-பிராஃபிட் நிறுவனங்களை செயல்திறன் கொண்டவைகளாக மாற்றுவதே இந்த ஆதாரவளத்தின் நோக்கமாகும். இந்தப் பயிற்சியில் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளன:
- சமூக ஊடகத் தளங்களில் உங்கள் பார்வையாளர்களுடன் இணைதலும் ஈடுபடும் கலையைக் கற்றுக்கொள்ளுதலும்
- ஈடுபாட்டை அதிகரிக்க உங்கள் நிறுவன பிராண்டை பார்வையாளர்களுக்கும் சாத்தியமான டோனர்களுக்கும் விளம்பரப்படுத்த, சமூக ஊடகத்தைக் கையாளுவதற்கான தனிப்பயனாக்கப்பட்ட சமூக ஊடக உத்தியைத் திட்டமிட்டு உருவாக்குதல்
சமூக ஊடக மேலாளர்கள் மற்றும் தகவல் தொடர்பு நிபுணர்களுக்கு இந்த ரிசோர்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது.