பரப்போசல்களுக்கு ஒரு கோரிக்கையை எழுதுவதற்கான (RFP) அடிப்படைகள்
ஒரு நான்-பிராஃபிட் நிறுவனத்தின் முன்முயற்சிகள் அல்லது புராஜெக்ட்களை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை கோடிட்டுக் காட்டும் புராஜெக்ட்களை டோனர்கள் சமர்ப்பிப்பதற்கு ஒரு முறையான அழைப்பாக முன்மொழிவு கோரிக்கை (RFP) உதவுகிறது. ஒரு வலிமையான முன்மொழிவு தங்கள் நோக்கம், இலக்குகள் மற்றும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை டோனர்களுக்கு திறமையாகத் தெரிவிக்கிறது. இது நிதியை ஈர்க்கவும், நம்பகத்தன்மையை வளர்க்கவும், திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு ஆதரவைப் பெறவும் உதவுகிறது, இறுதியில் நான்- பிராஃபிட் தங்கள் பணியை நிறைவேற்றவும், சமுதாயங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.
இந்த ஆதாரவளத்தில் பின்வருபவைகள் உள்ளடங்கும்:
- ஒரு புரப்போசலில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய கூறுகள் மற்றும் டோனரின் தேவைகளுக்கு ஏற்ப ஒருவரின் புரப்போசலை எவ்வாறு கட்டமைப்பது என்பதை உள்ளடக்கிய ஒரு RFP வழிகாட்டுதல் ஆவணம்
- RFPகளை எழுதும் போது மற்றும் பட்ஜெட் டெம்ப்ளேட்களை நிரப்பும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்
- ஒரு புரப்போசலை திமையாக எழுத நீங்கள் என்னென்ன படிகளைப் பின்பற்றலாம் என்பதை கோடிட்டுக் காட்டும் ஒரு ஊடாடும் பயிற்சி வீடியோ
ஃபண்ட்ரெய்சிங் வல்லுநர்கள் இந்த ஆதாரவளத்தைப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: இது ஒரு நிலையான டெம்ப்ளேட் அல்ல, மேலும் RFPகளின் ஒரு பகுதியாகக் கோரப்பட்ட தகவல்கள் பொதுவாக டோனருக்கு டோனர் மாறுபடும். தயவுசெய்து இதை ஒரு குறிப்பு டெம்ப்ளேட்டாக மட்டுமே பயன்படுத்தவும். உங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்த டெம்ப்ளேட்டை நீங்கள் தனிப்பயனாக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறீர்கள். இந்த செயல்பாட்டில் உங்களை வழிநடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தயவுசெய்து ipn@indiapartnernetwork.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.