டோனர் ஒருவருக்கு கடைப்பிடிக்கவேண்டிய சிறந்த நடைமுறைகள்
டோனருக்கு பிச் செய்தல் என்பது தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் அல்லது அரசு நிறுவனங்கள் என சாத்தியமான டோனர்களிடம் நிதி உதவிக்காக பிச் செய்யும் செயல்முறையைக் குறிக்கிறது. டோனருக்கு பிச் செய்தல் என்பது என்ஜிஓ நிறுவனங்களுக்கு முக்கியமானது. ஏனெனில் இது அவர்களின் நோக்கம், தாக்கம் மற்றும் நிதித் தேவைகளை ஆதரவளிக்கும் வாய்ப்புள்ளவர்களுக்கு உகந்த வகையில் எடுத்துக்கூற உதவுகிறது. நேரில் சந்திப்பது, எழுதப்பட்ட முன்மொழிவுகள், விளக்கக்காட்சிகள் அல்லது ஃப்ண்ட்ரெய்சிங் செய்யும்நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை இது எடுக்கலாம்.
டோனர்களுக்கு பிச் செய்வதில் நோக்கத்தைத் தெளிவாக விளக்குவது, கேட்கும் வகையில் எடுத்துக் கூறுவது, தாக்கத்தை நிரூபிப்பது மற்றும் நம்பிக்கையை உருவாக்குவது ஆகியவை முக்கியமாக அடங்கும். நிறுவனத்தின் நோக்கத்தைத் தெளிவாகக் கூறுவது, நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை விளக்குவது மற்றும் இதுவரை அடைந்த சாதனைகளை எடுத்துக் கூறுவது ஆகியவை நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் டோனர் ஈடுபாடு கொண்டு ஆதரவளிக்கும் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது.
ஒரு CSR டோனரிடம் பிச் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சிறந்த நடைமுறைகளின் தொகுப்பை இந்த ஆதாரவளம் வழங்குவதோடு நான்-பிராஃபிட் நிறுவனங்களின் ஃபண்ட்ரெய்சிங் நிபுணர்கள் மற்றும் தகவல் தொடர்பு குழுக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது டோனரால் கவனிக்கப்படுவதற்கும் நிதியைப் பெறத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமான உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் CSR நிபுணர்களுடன் நடத்தப்பட்ட குழு விவாதத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை ஆகும்.