டோனர் டியூ டெலிஜென்சைப் புரிந்துகொள்ளுதல்
இந்தச் சூழலில், டியூ டெலிஜென்ஸ் என்பது, நான்-பிராஃபிட் நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கு முன் டோனர்ர்கள் நடத்தும் அக்கறையோடு கூடிய விசாரணை, பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டைக் குறிக்கிறது. டியூ டெலிஜென்ஸ் என்பது நான்-பிராஃபிட் நிறுவனங்களின் ஆயத்தநிலையை மதிப்பிடுவதற்கும், அவர்களின் சட்டபூர்வமான தன்மை, நெறிமுறை தரநிலைகள் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் நடத்தப்படுகிறது. சட்டவிரோத அல்லது நெறிமுறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சோர்ஸ்களில் இருந்து நிதியைப் பெறும் அபாயத்தைக் குறைக்க இது உதவுகிறது.
கூடுதலாக, டியூ டெலிஜென்ஸ் நான்-பிராஃபிட் நிறுவனத்தின் நோக்கம், மதிப்புகள் மற்றும் இலக்குகள் சாத்தியமான டோனர்களின் குறிக்கோள்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்கிறது, பரஸ்பர நன்மை பயக்கும் பார்ட்னர்ஷிப்களை வளர்க்கிறது மற்றும் நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறது.
நான்- பிராஃபிட் இந்த பயிற்சியைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றைப் புரிந்துகொள்ளலாம்:
- ஒரு நிறுவனம் மற்றும் திட்ட அளவில் முக்கிய CSR தேவைகள்
- டியூ டெலிஜென்ஸின் பல்வேறு அம்சங்கள் குறித்த டோனரின் பார்வை
- டியூ டெலிஜென்ஸின் போது பொதுவாக அடையாளம் காணப்பட்ட இடைவெளிகள் மற்றும் அபாயங்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சிறந்த நடைமுறைகள்
இந்த ரிசோர்ஸ் CSR நிதியை ஓரளவு அல்லது முழுமையாக நம்பியிருக்கும் நான்-பிராஃபிட்நிறுவனங்களின் ஃபண்ட்ரெய்சிங், சட்டம், நிதி மற்றும் கணக்கியல் குழுக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.