நிதிதிரட்டுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சமூக ஊடகத்தில் எப்படி கேம்பெய்ன் செய்வது
சமூக ஊடகத் தளங்களில் ஒருங்கிணைந்த செய்தி மூலமும் செயல்பாடுகள் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஃப்ண்ட்ரெய்சிங், ஒரு நோக்கத்தை ஊக்குவித்தல் அல்லது செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதில் ஒருமுகப்படுத்தும் முயற்சிகளே சமூக ஊடகக் கேம்பெய்ன்கள் ஆகும்.
டிஜிட்டல் முறையில் இயங்கும் இன்றைய சுற்றுச்சூழல் அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த பாடுபடும் நான்-பிராஃபிட் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வதற்கும் சமூக ஊடகங்களின் ஆற்றலைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். இந்தக் கேம்பெய்ன்கள் நான்-பிராஃபிட் நிறுவனங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் தங்கள் பணிகளை எடுத்துக் கூறவும், புதிய பின்தொடர்பவர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈர்க்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன.
இந்தப் பயிற்சி நான்-பிராஃபிட் நிறுவனங்களுக்கு பின்வரும் அடிப்படைப் புரிதலை வழங்குகிறது:
- அவர்களின் நோக்கத்தைப் பற்றிய மக்களைக் கவரும் வகையிலான கதைகளை உருவாக்க சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது
- அவர்களின் சமூக ஊடக செயல்பாட்டை எவ்வாறு நிர்வகிப்பது
- பணம் கொடுத்து செய்யப்படும் கேம்பெய்ன்கள் எவ்வாறு ஃப்ண்ட்ரெய்சிங் செய்ய உதவும் என்பதை அறிவது
இந்த வளஆதாரம் நான்-பிராஃபிட் நிறுவனங்களின் பிரச்சார மேலாளர்கள், நிதி திரட்டும் மேலாளர்கள், சமூக ஊடக மேலாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பு: நிறுவனங்கள் தங்கள் தனித்துவமான நோக்கம், பார்வையாளர்கள் மற்றும் ஆதாரவளங்களுக்கு ஏற்ப உத்திகளை வடிவமைப்பது இன்றியமையாதது ஆகும். ஆதரவாளர்களிடம் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை வளர்ப்பதற்கு நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறையோடு ஃப்ண்ட்ரெய்சிங் செய்யும் நடைமுறைகளைப் பராமரிப்பதும் மிக முக்கியம்.